வற் வரியை காண்பித்து சிவப்பு சீனியின் விலை அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 10, 2024

வற் வரியை காண்பித்து சிவப்பு சீனியின் விலை அதிகரிப்பு

வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் சந்தையில் சிவப்பு சீனியின் விலையையும் வர்த்தகர்கள் அதிகரித்துள்ளனர்.

கடந்த 09 ஆம் திகதிய நிலவரத்தின்படி, சிவப்பு சீனி ஒரு கிலோ விலை 415 ரூபாவாக அதிகரித்துள்ளது.

பெலவத்த மற்றும் செவனகல ஆகிய தொழிற்சாலைகளிலிருந்து மாத்திரமே சிவப்பு சீனி உற்பத்தி செய்யப்படுகிறது.

முன்னைய விலையிலிருந்து பதினெட்டு வீதம் (18%) வற் வரியும் 2.6% சமூக பாதுகாப்பு வரியும் சேர்த்து ஒரு கிலோ சிவப்பு சீனியின் விலை 390 ரூபாவைத் தாண்டியுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர்.

அதனுடன் தமது இலாபத்தையும் சேர்த்த பின்னர் ஒரு கிலோ சிவப்பு சீனியின் விலை 415 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை சீனி சந்தையில் 265 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சிவப்பு சீனியின் விலையை விட இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை, சுமார் 150 ரூபா குறைவாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment