வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துக்கூற மறுத்த மஹிந்த - News View

About Us

About Us

Breaking

Monday, November 13, 2023

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துக்கூற மறுத்த மஹிந்த

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்த்துக்கூற முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ் மறுத்து விட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (13) ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மஹிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலார்கள் கருத்து கேட்டபோதே உடனடியாக எப்படிக் கருத்துக் கூறுவது எனக்கூறி மறுத்து விட்டார்.

இருந்தபோதும் ஊடகவியலாளர்கள் அவரிடம் தொடர்ந்து கேட்டபோது, ''நான் வரவு செலவுத் திட்ட அறிக்கையை முழுமையாக இன்னும் படிக்கவில்லை. அதனால் உடனடியாக என்னிடம் கேட்டால் நான் எப்படி கருத்துக் கூற முடியும்? இது தொடர்பாக நன்கு அறிந்தவர்களிடம் கேளுங்கள். நான் படித்த பின்னர் கூறுகின்றேன்.

அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது நல்ல விடயம் என்றார்.

No comments:

Post a Comment