2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை 2025 ஆம் ஆண்டும் முன்வைப்பார்கள் : எஸ்.சிறிதரன் - News View

About Us

About Us

Breaking

Monday, November 13, 2023

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை 2025 ஆம் ஆண்டும் முன்வைப்பார்கள் : எஸ்.சிறிதரன்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை காட்டிலும் பல முன்மொழிவுகள் கடந்த காலங்களிலும் முன்வைக்கப்பட்டன. ஆனால் எவையும் செயற்படுத்தப்படவில்லை. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளை 2025 ஆம் ஆண்டும் முன்வைப்பார்கள் எதனையும் செயற்படுத்தமாட்டார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும், நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க திங்கட்கிழமை (13) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். இதனை தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வழமையான அறிக்கையாகவே 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியால் சபையில் வாசிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் இந்த முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பிட்ட முன்மொழிவுகள் ஏதும் செயற்படுத்தப்படவில்லை.

நாட்டு மக்கள் பொருளாதார பாதிப்பால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். வரவு செலவுத் திட்டத்தில் வரி அதிகரிப்பதும், சொற்ப அளவில் சம்பளம் அதிகரிப்பதாலும் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொள்ளும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமையவில்லை.

வருடாந்தம் சமர்ப்பிக்கப்படும் சம்பிரதாயபூர்வமான வரவு செலவுத் திட்டமாகவே 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து இறந்த காலத்தை அடியொற்றியதாக சகல முன்மொழிவுகளும் காணப்படுகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தற்போது முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை காட்டிலும் பல முன்மொழிவுகள் கடந்த காலங்களிலும் முன்வைக்கப்பட்டன. ஆனால் எவையும் செயற்படுத்தப்படவில்லை.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளை 2025 ஆம் ஆண்டும் முன்வைப்பார்கள். எதனையும் செயற்படுத்தமாட்டார்கள் என்றார்.

No comments:

Post a Comment