இஸ்ரேல் - பலஸ்தீன் யுத்தத்தில் பலியான பெண்ணின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது - News View

About Us

Add+Banner

Breaking

  

Saturday, October 28, 2023

demo-image

இஸ்ரேல் - பலஸ்தீன் யுத்தத்தில் பலியான பெண்ணின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது

20231028_123233%20(Custom)
இஸ்ரேல் - ஹமாஸுக்கு இடையிலான யுத்தத்தில் பலியான அனுலா ரத்நாயக்க எனும் இலங்கை பெண்ணின் சடலம் இன்று (28) இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும், இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்டிருந்தது.

இன்று காலை இந்தப் பெண்ணின் சடலம் இலங்கையை வந்தடையுமென, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்திருந்தார்.

களனி - ஈரியவெட்டிய பகுதியை சேர்ந்த அனுலா ரத்நாயக்க எனும் 49 வயதான, இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் இஸ்ரேலில் 10 வருடங்களாக பணி புரிந்துள்ளார்.
anula
அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவர் பணி புரிந்த வீட்டைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்த நிலையில், அது ஆரம்பத்தில் மறுக்கப்பட்ட போதிலும் பின்னர் அது உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த யுத்தத்தின்போது, காணாமல் போன மற்றைய இலங்கையர் இறந்து விட்டாரா என்பது தொடர்பாக கண்டறியும் பணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

இந்நிலையில், அவரது குழந்தைகளின் DNA மாதிரியை பயன்படுத்தி அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
20231028_123559%20(Custom)
CAP_20231028_104322%20(Custom)
IMG-20231028-WA0020%20(Custom)
IMG-20231028-WA0024%20(Custom)

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *