ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கான நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக நஸீர் ஹாஜி இன்று சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கான மரண விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட் ஏறாவூர் நஸீர் ஹாஜி, மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் நீதிபதியின் கட்டளைக்கமைவாக தனது கடமையினை சிறப்பாக செய்து வந்தார்.
இவரது சிறப்பான சேவைகளை கவனத்தில் கொண்ட நீதி அமைச்சு, 70 வயது வரைக்குமான நிரந்தர மரண விசாரணை அதிகாரியாக ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவின் அனைத்து கிராம சேவகர் பிரிவுக்குமாக 01-08-2023 இலிருந்து நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்நியமனத்திற்கான சத்தியப்பிரமான நிகழ்வு இன்று (06) காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ. பீட்டர் போல் முன்னிலையில் நடைபெற்றது.
எம் எஸ் எம் நூர்தீன்
No comments:
Post a Comment