வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட போதை மாத்திரைகளை வைத்திருந்த பெண் சந்தேகநபர் ஒருவரை விசேட பொலிஸ் அதிரடிப் படையின் அநுராதபுரம் முகாம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படை அநுராதபுரம் முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று (05) பகல் ஹிதோகம பொலிஸ் பிரிவின் நாச்சியாதுவ பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின்போது பெண் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன், வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 200 க்கும் அதிகமான போதை மாத்திரைகளை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 46 வயதுடய உலப்பனை பகுதியை வசிப்பிடமாக கொண்ட பெண் ஒருவர் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சந்தேகநபரை ஹிதோகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை ஹிதோகம பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு, விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அநுராதபுரம் நிருபர்
No comments:
Post a Comment