சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட வாழைப்பழத்தில் போதைப் பொருள் - News View

About Us

Add+Banner

Breaking

  

Saturday, September 30, 2023

demo-image

சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட வாழைப்பழத்தில் போதைப் பொருள்

23-6517beb5cd1ee%20(Custom)%20(Custom)
(எம்.ஆர்.எம்.வசீம்)

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு கொண்டுவரப்பட்ட வாழைப்பழத்தில் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களை பார்வையிடுவதற்காக நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை 3.15 மணியளவில் வந்த நபர் ஒருவரினால் சந்தேக நபர் ஒருவருக்கு வழங்குவதற்காக கொண்டுவந்திருந்த உணவுப் பொதி களுத்துறை சிறைச்சாலையில் விருந்தினர்கள் பார்க்கும் இடத்தில் கடமையில் இருந்த அதிகாரிளால் சோதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபர் ஒருவருக்கு வழங்குவதற்காக கொண்டுவந்திருந்த வாழைப்பழ சீப்பொன்றில் வாழைப்பழத்துக்குள் 3 மற்றும் 4 அங்குல அளவிலான 16 குடிபான பட்டைகளுக்குள் (ஸ்டோ பட்டை) ஹொரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டுவந்த நபர் மற்றும் குறித்த போதைப் பொருள் சட்ட நடவடிக்கைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்துக்கு ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் களுத்துறை சிறைச்சாலையினால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *