பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் பாவனைக்கு தடை - News View

About Us

About Us

Breaking

Saturday, September 30, 2023

பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் பாவனைக்கு தடை

ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களின்  உற்பத்தி, விநியோகம் மற்றும் பாவனைக்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை ஓக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ளது

இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் விதிகளின்படி சட்டம் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனால் நாளை முதல் நாடளாவிய ரீதியில் இது தொடர்பான ஆய்வுகள் மற்றும் சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒருமுறை பயன்படுத்தக் கூடிய குடிநீர் குவளைகள், பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள், முட் கரண்டி மற்றும் கத்திகள் உட்பட பிளாஸ்டிக் பொருட்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு என்பனவற்றை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment