அதிகாலை வெளிநாடு பறந்தார் ஜனாதிபதி ரணில் - News View

About Us

About Us

Breaking

Friday, June 16, 2023

அதிகாலை வெளிநாடு பறந்தார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை (17) அதிகாலை சென்றுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 03.30 மணி அளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 649 என்ற விமானத்தில் இலங்கையில் இருந்து பயணமானார்கள்.

பிரித்தானியாவுக்கான விஜயம் ஒன்றிற்காகவும், பிரான்சின் பாரிஸில் நடைபெறவுள்ள புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும் ஜனாதிபதி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரான்சில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.

"இன்று உலகம் எதிர்கொள்ளும் நெருக்கடியான சவால்களுக்கு தீர்வு காண்பது" என்ற தொனிப்பொருளில் ஜூன் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment