மரணத்தின் பிடியிலிருந்து தப்பிய பத்து வயது சிறுமியொருவர் கொழும்பு ரிஜ்வே வைத்தியாசாலைக்காக நிதிசேகரிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.
எலிசா சாமுவேல் என்ற பத்து வயது சிறுமி தனது தாயாரான வைத்தியர் மனூரி சமரக்கோனின் உதவியுடன் இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளார்.
லேடி ரிட்ஜ்வே வைத்தியாசாலையின் தீவிர சிகிச்சை பிரிவிற்காக நிதி திரட்டுவதற்கான நிகழ்வு 17- 18 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளது.
எலிசா ஒரே நேரத்தில் கொவிட் மற்றும் டெங்குவால் பாதிக்கப்பட்டார் என தெரிவித்துள்ள தாயார் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் மருத்துவர்களும் தாதிமார்களும் கடும் போராட்டத்தின் பின்னர் அவரது உயிரை காப்பாற்றினர் என தெரிவித்துள்ளார்.
இன்று எலிசாவிற்கு பத்து வயது அவர் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கின்றார், இதற்கு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் மருத்துவர்களும் தாதிமார்களுமே காரணம் என தெரிவித்துள்ள தாயார் எலிசா மரணத்தின் பிடியில் சிக்குண்டிருந்த தருணத்தில் மருத்துவர்கள் அற்புதமான விதத்தில் செயற்பட்டு அவரை மீட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தன்னை காப்பாற்றிய வைத்தியசாலைக்கு மகள் தன்னால் முடிந்த விதத்தில் ஏதாவது செய்ய தீர்மானித்துள்ளார் எனவும் வைத்தியரான தாயார் தெரிவித்துள்ளார்.
லயனல் வென்ட் அரங்கில் காட்சிக்கு வைக்கப்படும் ஓவியங்கள் ஏலத்தில் விடப்படும் என குறிப்பிட்டுள்ள தாயார் இதன் மூலம் கிடைக்கும் பணத்தை மருத்துவமனையின் தீவிர சிசிச்சைப் பிரிவிற்கு கட்டில்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment