சட்டவிரோதமாக தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை நாட்டிற்கு கொண்டு வந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பில் சபாநாயகர் விசேட அறிக்கை கோரியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையை உடனடியாக வழங்குமாறு சுங்க பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பதவியிலிருந்து நீக்குவதற்கான யோசனையை கொண்டு வருவது தொடர்பில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக் குழுவில் கட்சித் தலைவர்கள் தமது கருத்துகளை முன்வைத்தனர்.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காகவே இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 23 ஆம் திகதி புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சட்டவிரோதமான முறையில் ஏழரை கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளுடன் துபாயில் இருந்து நாடு திரும்பிய போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, 75 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment