துப்பாக்கிச் சூடு : முன்னாள் எம்.பி கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, June 15, 2023

துப்பாக்கிச் சூடு : முன்னாள் எம்.பி கைது

துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரலுகொட பிரதேசத்தில் நேற்று (14) பிற்பகல் வெடிச் சத்தம் கேட்டதாக வந்த செய்தியின் அடிப்படையில் ஹொரணை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேற்படி பிரதேசத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான காணியொன்றை பராமரிப்பதற்காக தம்பதியொருவர் தங்கியிருந்த நிலையில், வெளியாட்களை அழைத்து வர வேண்டாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பதியிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தனது காணிக்கு சென்றபோது வெளியாட்கள் குழுவொன்று காணியில் இருந்துள்ளதுடன் அங்கு முன்னாள் எம்.பி.யுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர், அவருக்கு உரித்தான அனுமதிப்பத்திரம் கொண்ட துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதன்போது துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதனடிப்படையில், ஹொரணை பொலிஸார் விசாரணை மேற்கொண்டதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் 3 தோட்டாக்களுடன், இங்கிரிய, பாணந்துறை வீதியில் வசிக்கும் 70 வயதுடைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஹொரணை தொகுதியின் அமைப்பாளரான பீ.டி அபேரத்ன கைது செய்யப்பட்டள்ளார்.

சந்தேகநபர் இன்று வியாழக்கிழமை ஹொரணை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment