சிறுவர்கள் மத்தியில் டெங்கு நோய் அதிகரித்து வரும் நிலையில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மாத்திரம் 35 சிறுவர்கள் சிகிச்சைபெற்று வருவதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால், டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைவதாக தெரியவில்லை.
சிறுவர் வைத்தியசாலைக்கு நாளாந்தம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு, 35 சிறுவர்கள் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஏழு பேர் தீவிர நோய்த் தாக்கத்துடன் காணப்படுகின்றனர்.
எவ்வாறெனினும் இந்நோய் பாதிப்பு விரைவில் நீங்கும் என நம்பிக்கை கொள்ள முடியாது. சீரற்ற காலநிலை காரணமாக அது மேலும் அதிகரிக்கவே செய்யும். இதனால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். வீடுகள் மற்றும் பாடசாலை சுற்றாடல்களில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மிக அவசியமாகும்.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த முடியாது போனால் வரலாற்றில் அதிக டெங்கு நோயாளர்கள் உருவாகியுள்ள வருடமாக இந்த வருடம் பதியப்படும். அந்த நிலையை தவிர்த்துக் கொள்ள அனைவரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 43,346 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் டெங்கு நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment