தனது 89 வயது தாயை தூக்கி வீசி, தாக்கியதில் குறித்த தாய் உயிரிழந்துள்ளார்.
யக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புவவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றையதினம் (14) இடம்பெற்ற இச்சம்பவத்தில் 89 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது பாட்டியை, தந்தை தூக்கி கட்டிலில் வீசியதை தான் பார்த்ததாக இறந்தவரின் பேரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதன்போது பாட்டியின் தலை கட்டிலில் மோதியதாகவும் பின்னர் தனது தந்தை பாட்டியின் முகம் மற்றும் மார்பில் உதைத்ததாகவும் இறந்தவரின் பேரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக 46 வயதுடைய இறந்தவரின் மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரை இன்று (15) கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுடுள்ளார்.
குறித்த பெண்ணின் சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக யக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment