(எம்.வை.எம்.சியாம்)
எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 60 வீதமான மருந்துகளுடைய விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த 60 மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் கையொப்பத்துடன் வியாழக்கிழமை (15) வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைவாக 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 16 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வியாழக்கிழமை (15) முதல் மருந்துகளின் விலைகளை 16 வீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் 3 மாதங்களுக்கு ஒருமுறை மருந்துகளின் விலைகளை மீளாய்வு செய்து அதனை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
அதற்கமைவாக, எதிர்வரும் இரண்டு மாதங்களில் மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய விலை குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளினால் சாதகமான நிலையை அடைய முடியும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment