வாக்குறுதிக்கமைய வரிக் கொள்கையில் திருத்தம் மேற்கொள்ளாவிட்டால் பாரிய தொழிற்சங்க போராட்டம் - எச்சரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, June 16, 2023

வாக்குறுதிக்கமைய வரிக் கொள்கையில் திருத்தம் மேற்கொள்ளாவிட்டால் பாரிய தொழிற்சங்க போராட்டம் - எச்சரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

(எம்.ஆர்.எம்.வசீம்)

வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் இந்த மாத்தத்துக்குள் அரசாங்கம் வரிக் கொள்கையில் திருத்தம் மேற்கொள்ளாவிட்டால் எதிர்வரும் வாரத்தில் பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அழுத்கே தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வரிக் கொள்கையில் ஜூன் மாதத்துக்குள் திருத்தம் மேற்கொள்வதாக அனைத்து தொழிற்சங்க ஒன்றியத்துக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மாதத்துக்குள் வரிக் கொள்கையில் திருத்தம் ஒன்றை மேற்கொள்வதாக அரசாங்கம் தொழிற்சங்க ஒன்றியத்துக்கு வாக்குறுதி அளித்திருந்தது.

வாக்குறுதியை மேலும் தாமதிப்பதனால் விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் பல்வேறு துறைசார்ந்த தொழில் வல்லுநர்கள் நிரந்தரமாகவே நாட்டை விட்டு செல்லும் அபாயம் இருந்து வருகிறது.

நாட்டுக்கும் தொழில் வல்லுநர்களுக்கும் பொருத்தமான வரித் திருத்தம் ஒன்றை இந்த மாதத்தில் மேற்கொள்வதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்தாலும் 16 நாட்கள் கழிந்துள்ளபோதும் அது தொடர்பில் தீர்மானம் ஒன்றையோ அறிவிப்பொன்றையோ மேற்கொள்ளாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுக்காமல் இருப்பதன் மூலம் நாட்டுக்கு மனித வள முகாமைத்துவம் தொடர்பாக மீள நிரப்ப முடியாத பாரிய பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. அது வைத்திய துறையில் பாரிய நிலைமையை ஏற்படுத்தும் வரை விருத்தியடையும் அபாயம் இருக்கிறது.

நாட்டில் இருக்கும் தொழில் வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறைகளின் மனித வங்களை பாதுகாத்துக் கொண்டு, குறித்த வரித் திருத்தத்தை மேற்கொள்ள ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் வாரத்தில் பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment