"ஆளுநரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு" உத்தியோகபூர்வமாக நேற்று (16) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு வழங்கும் முகாமாக "ஆளுநரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு" உத்தியோகபூர்வமாக நேற்று (16) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால், திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் சேவைகளையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ளும் வகையில் "ஆளுநரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு" திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டுதலின் கீழ் வாரத்திலுள்ள ஏழு நாட்களும் 24 மணி நேரமும் செயற்படக்கூடிய வகையில் இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை தொலைபேசி ஊடாக தீர்த்துக் கொள்ள முடியும். பதிவு செய்யப்பட்ட அனைத்து முறைப்பாடுகளும் ஆளுநர் செயலகத்தால் மேற்பார்வை செய்யப்படும்.
ஆளுநரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவின் அலுவலக தொலைபேசி இலக்கமான 026 7500500 என்ற இலக்கத்திற்கு அழைத்து பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும்.
இதன்போது கிழக்கு மாகாண ஆளுநருக்கான இணையத்தளமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.
No comments:
Post a Comment