வாகன இறக்குமதிக்கு இடமளிக்கப் போவதில்லை : எரிபொருளுக்கு ஒரே நாளில் 80 மில்லியன் டொலர் செலவு - News View

About Us

About Us

Breaking

Friday, June 16, 2023

வாகன இறக்குமதிக்கு இடமளிக்கப் போவதில்லை : எரிபொருளுக்கு ஒரே நாளில் 80 மில்லியன் டொலர் செலவு

வாகனங்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப் போவதில்லையென்ற தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதையடுத்தே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரே தடவையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு எரிபொருள் கொள்வனவுக்காக வழங்கப்படுகிறது. வர்த்தக சந்தையிலிருந்தும் மத்திய வங்கியிலிருந்தும் அது பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதனால், டொலரின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது.

எமது நாட்டில் ஒரு தரப்பினர் டொலர் மூலமாகவே முதலீடுகளை செய்து வருகின்றனர். அவர்களும் டொலர்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்து விட்டனர்.

அதனால்தான் ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்து டொலரின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. அதனால், நேற்று முன்தினம் 320 ரூபாயாகவும் நேற்று 306 ரூபா என்ற நிலைக்கும் டொலர் சென்றுள்ளது. 

எனினும், இது மோசமான நிலை கிடையாது. கேள்வி மற்றும் விநியோகத்தை அடிப்படையாகக் கொண்ட சாதாரண நிலையே இது. 

எரிபொருளுக்காக 80 மில்லியன் டொலர் வரை செல்லும்போது, டொலரின் பெறுமதியில் அது அழுத்தம் கொடுக்கின்றது. இத்தகைய நிலையில் எந்த வகையிலும் வாகன இறக்குமதிக்கு இடமளிக்கப்பட மாட்டாது" என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment