கப்பல் விபத்துகள் தொடர்பில் ஆராய பாராளுமன்ற விசேட குழு : வைத்தியசர் ரமேஷ் பத்திரண தலைமையில் 15 பேர் உள்ளடக்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 6, 2023

கப்பல் விபத்துகள் தொடர்பில் ஆராய பாராளுமன்ற விசேட குழு : வைத்தியசர் ரமேஷ் பத்திரண தலைமையில் 15 பேர் உள்ளடக்கம்

றிஸ்வான் சேகு முகைதீன் 

இலங்கையுடன் தொடர்புடைய கப்பல் விபத்துகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான பரிந்துரைகளை முன்வைக்க, பாராளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமர்வு இன்று (06) மு.ப. 09.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது. இதற்போது அறிவித்தல்களை விடுத்த சபாநாயகர் இதனை அறிவித்தார்.

குறித்த குழுவின் தலைவராக வைத்தியர் ரமேஷ் பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, நியூ டயமண்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல் விபத்துகள் தொடர்பில் குறித்த குழு ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்.

கப்பல் விபத்து தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட குழு

வைத்தியர் ரமேஷ் பத்திரண (தலைவர்)
கலாநிதி சுரேன் ராகவன்
டயானா கமகே
பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ்
சட்டத்தரணி ரஊப் ஹக்கீம்
விஜித ஹேரத்
கலாநிதி சரத் வீரசேகர
நிரோஷன் பெரேரா
அஜித் மன்னப்பெரும
நிமல் லான்ஷா
துஷார இந்துனில்
வைத்தியர் காவிந்த ஹேஷான் ஜயவர்தன
அகில எல்லாவல
நாலக பண்டார கோட்டேகொட
சட்டத்தரணி மதுர விதானகே

பாராளுமன்ற அமர்வு இன்று (06) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பனதோடு, மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய் மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, மு.ப. 10.30 முதல் பி.ப. 5.00 மணி வரை, சிவில் விமான சேவைச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள், வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழ் பதின்மூன்று ஒழுங்குவிதிகள் மற்றும் கப்பற்றொழில் முகவர்களுக்கு கப்பற்சரக்கனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தாப் பொதுக்காவுநர்க்கு மற்றும் கொள்கலன் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

அதன் பின்னர், பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.

No comments:

Post a Comment