கம்பளை பிரதேசத்தில் நேற்று (05) இரவு சிறிய அளவிலான நில அதிர்வொன்று பதிவாகியுள்ளதாக, புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
கம்பளை பிரதேசத்தில், நேற்றிரவு 10.49 மணியளவில் 2 ரிச்டர் அளவிலான சிறிய நில அதிர்வு பதிவாகியுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நில அதிர்வின் மையமாக புபுரஸ்ஸ பிரதேசம் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, மஹாகனதரவ, ஹக்மண, பல்லேகலை, புத்தங்கல ஆகிய பகுதிகளில் இதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment