வாகனங்களின் கண்ணாடிகளை திருடிய இருவர் கைது ! 10 மோட்டார் சைக்கிள்கள், 40 கண்ணாடிகள் மீட்பு - News View

About Us

Add+Banner

Monday, May 1, 2023

demo-image

வாகனங்களின் கண்ணாடிகளை திருடிய இருவர் கைது ! 10 மோட்டார் சைக்கிள்கள், 40 கண்ணாடிகள் மீட்பு

IMG-20230430-WA0039%20(Custom)
கொழும்பு நகரில் நீண்ட காலமாக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களின் பக்க கண்ணாடி திருட்டில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்கள் வெள்ளவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 மோட்டார் சைக்கிள்களும், ஒரு முச்சக்கர வண்டியும், வாகன பக்க கண்ணாடிகள் 40 உம் மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும், திருடப்படும் கண்ணாடிகளை விற்பனை செய்த பஞ்சிகாவத்தை பகுதியைச் சேர்ந்த வியாபார நிலைய உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின் கல்கிசை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொட பகுதியை சேர்ந்த 35 மற்றும் 39 வயதுடைய சந்தேகநபர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் நீண்ட காலமாக கொழும்பு நகர பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை நூதனமாக திருடி அந்த மோட்டார் சைக்கிள்களில் வாகனங்களின் பக்க கண்ணாடிகளை உடைத்து திருடி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை தொடர்பில் பல்வேறுபட்ட முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சுபாஸ் காந்தவலவின் பணிப்பில் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதர் கேசாந் தலைமையிலான பிரியங்கர, சுரேந்திர, விஐயசிங்க, சமரவீர, சந்தன, கருணாதிலக, சில்வா, சஞ்சேய் உள்ளிட்ட பொலிஸ் அணியினரால் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
IMG-20230430-WA0048%20(Custom)

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *