றிஸ்வான் சேகு முஹைதீன்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) உறுப்பினர்களான மொஹான் சமரநாயக்க மற்றும் பி. உதேனி விக்ரமசிங்க ஆகியோர் தமது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவில் தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாக, தாங்கள் குறித்த பதவியிலிருந்து விலகுவதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மொஹான் சமரநாயக்க மற்றும் பி. உதேனி விக்ரமசிங்க ஆகியோர் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொஹான் சமரநாயக்க, இதற்கு முன்னர் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மின் கட்டணத்தை அதிகரிப்பதை மேற்கொள்ளாதிருப்பது தொடர்பில் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மொஹான் சமரநாயக்க மற்றும் உதேனி விக்ரமசிங்க ஆகியோர் மாற்று கருத்தை கொண்டுள்ளமை தொடர்பில் தமது எதிர்ப்பை வெளியிட்டு கருத்து வெளியிட்டதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, ஆனந்த பாலித்த மற்றும் சஞ்சீவ தம்மிக்க ஆகிய இருவரும் அச்சுறுத்தும் விடுத்ததாக, கைது செய்யப்பட்டு அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித்த மற்றும் மின்சார நுகர்வோர் சங்க செயலாளர் சஞ்சீவ தம்மிக்க ஆகியோரே இவ்வாறு கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
No comments:
Post a Comment