உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் 33 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதில் பொலிஸ் அத்தியட்சகர்களாக கடமையாற்றும் பொருட்டு குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
குறித்த இடமாற்றத்திற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, அவசர கடமையின் தேவையின் அடிப்படையில் குறித்த 33 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் அரச நியமனங்கள், இடமாற்றங்களுக்கு அனுமதியில்லை என்பதோடு, அத்தியாவசிய தேவைகளுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன், அவ்வாணைக்குழுவினால் அவசியமென உறுதிப்படுத்தப்படும் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment