சவால்களுக்கு நீங்கள் தனித்து முகங்கொடுக்கவில்லை என்பதை தெரியப்படுத்தவே நான் இங்கு வந்தேன் - பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் இலங்கையர்களுக்கு தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, February 4, 2023

சவால்களுக்கு நீங்கள் தனித்து முகங்கொடுக்கவில்லை என்பதை தெரியப்படுத்தவே நான் இங்கு வந்தேன் - பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் இலங்கையர்களுக்கு தெரிவிப்பு

(நா.தனுஜா)

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான அனைத்துவித ஒத்துழைப்புக்களையும் வழங்கத்தயாராக இருப்பதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் உறுதியளித்துள்ளார்.

அரசாங்கத்தின் அழைப்பையேற்று சுதந்திரதின நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீஸியா ஸ்கொட்லன்ட், கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, உலகளாவிய ரீதியில் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றின் அழுத்தங்களால் இலங்கை மாத்திரமன்றி மேலும் பல நாடுகள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றன என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், எனவே 56 உறுப்பு நாடுகளைக் கொண்ட பொதுநலவாய அமைப்பானது, நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் உறுப்பு நாடுகளின் மீட்சிக்கு அவசியமான ஆதரவை வழங்கும் நோக்கில் ஒன்றிணைந்து செயலாற்றி வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான அழுத்தங்களினால் ஏற்பட்ட சுமையை இலங்கை தொடர்ந்து உணர்கின்றது (சுமக்கின்றது) என்பதை நான் அறிவேன்.

சுமையைத் தாங்குவதென்பது மிகவும் கடினமானதாகவும், அச்சுறுத்தக்கூடியதாகவும் இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள பற்றீஸியா ஸ்கொட்லன்ட், இருப்பினும் 'இந்த சவால்களுக்கு நீங்கள் தனித்து முகங்கொடுக்கவில்லை' என்பதை அனைத்து இலங்கையர்களுக்கும் தெரியப்படுத்துவதற்காகவே நான் இங்கு வந்திருக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment