அம்பாறையில் கஞ்சா தோட்டம் முற்றுகை : 7 ஆயிரத்து 500 செடிகள் அழிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, February 4, 2023

அம்பாறையில் கஞ்சா தோட்டம் முற்றுகை : 7 ஆயிரத்து 500 செடிகள் அழிப்பு

கஞ்சா பயிர்ச் செய்கை செய்யப்பட்ட பகுதியை விசேட அதிரடிப் படையினர் முற்றுகையிட்டு பயிரிட்பட்டிருந்த 7 ஆயிரத்து 500 கஞ்சா செடிகளை மீட்டு அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை தமண பொலிஸ் பிரிவிலுள்ள பக்மிட்டியாவ காட்டுப்பகுதியில் கஞ்சா பயிர்ச் செய்கை செய்யப்பட்ட பகுதியை விசேட அதிரடிப் படையினர் நேற்று வெள்ளிக்கிழமை (03) முற்றுகையிட்டு பயிரிட்பட்டிருந்த 7 ஆயிரத்து 500 கஞ்சா செடிகளை மீட்டு அழித்துள்ளதாக தமண பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் அறுகம்பை விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து குறித்த காட்டுப் பகுதியை சம்பவதினமான நேற்று முற்றுகையிட்டனர்.

இதன்போது அங்கு ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 3 தொடக்கம் 6 அடி வரையிலான உயரமுடைய 7 ஆயிரத்து 500 கஞ்சா செடிகள் பயிடப்பட்டிருந்ததை பிடுங்கி எடுத்து தீயிட்டு எரித்து அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தமண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment