ஒஸ்வல்ட் கோமிஸ் ஆண்டகை நித்திய இழைப்பாறுதல் அடைந்தார் - News View

About Us

About Us

Breaking

Friday, February 3, 2023

ஒஸ்வல்ட் கோமிஸ் ஆண்டகை நித்திய இழைப்பாறுதல் அடைந்தார்

ரிஸ்வான் சேகு முஹைதீன் 

கொழும்பு ஓய்வுநிலை பேராயர் ஒஸ்வல்ட் கோமிஸ் ஆண்டகை இன்று (03) அதிகாலை நித்திய இழைப்பாறுதல் அடைந்தார்.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த 90 வயதான அவர், இன்று (03) இழைப்பாறுதல் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலாநிதி ஒஸ்வல்ட் கோமிஸ் ஆண்டகை கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நாட்டின் சமய நல்லிணக்கத்திற்காக இடைவிடாது பாடுபட்ட புனித ஒஸ்வல்ட் கோமிஸ் இலக்கியத்துறையின் முன்னேற்றத்துக்கான தனித்துவமான பணியிலும் ஈடுபட்டார்.

புனித கலாநிதி ஒஸ்வால்ட் கோமிஸ் 1932 டிசம்பர் 12, இல் களனியில் பிறந்தார்.

அவர் தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரியில் கற்றார். போரின் போது அவர் புனித போல் பாடசாலையில் (புனித ஜோசப் கல்லூரியின் கிளை), வராகொடைக்கு மாற்றப்பட்டார். பின்னர் புனித ஜோசப் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார்.

1950 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் திகதி பொரளை புனித அலோசியஸ் செமினரியில் இணைந்து பொரளை புனித பேனார்ட் செமினரியில் இணைந்து 1951 ஓகஸ்ட் 31 ஆம் திகதி புனித பதவியை எடுத்தார். 

அதன் பின்னர் 1958 பெப்ரவரி 03 ஆம் திகதி கொட்டாஞ்சேனை புனித லூசியா கதீட்ரலில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

அவர் 1968 ஏப்ரல் 09ஆம் திகதி தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, கொழும்பு துணை ஆயராகவும், 1968 ஜூலை 17 இல் முலியாவின் பெரளவு ஆயராகவும் நியமிக்கப்பட்டார்.

பிலிப்பைன்ஸின் அடம்சன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், நாளாந்த மற்றும் வார இறுதி நாளிதழ்களுக்கு சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதியதோடு ஏராளமான புத்தகங்களையும் வெளியிட்டார். 

அவர் சுமார் 15 பாடசாலைகள், சர்வதேச பாடசாலைகள், தொழில்நுட்ப பாடசாலைகளை நிறுவுவதில் பங்களித்துள்ளார். அவர் தனது சொந்த கிராமமான களனி மக்களுக்காக ஒரு மருத்துவ நிலையத்தையும் நிறுவியுள்ளார்.

அவர் 2002 ஜூலை 27 ஆம் திகதி கொழும்பு பேராயராக நியமிக்கப்பட்டு ஓகஸ்ட் 2009 வரை அப்பணியில் ஈடுபட்டு பின்னர் ஓய்வு பெற்றார்.

No comments:

Post a Comment