தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23, 24 இல் - News View

About Us

About Us

Breaking

Friday, February 3, 2023

தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23, 24 இல்

றிஸ்வான் சேகு முஹைதீன்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தபால் மூல வாக்களிப்பு, எதிர்வரும் பெப்ரவரி 22, 23, 24ஆம் திகதிகளில் இடம்பெறுமென, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள், கடந்த ஜனவரி 05 முதல் ஜனவரி 23 நள்ளிரவு வரை தகுதியான வாக்காளர்களிடமிருந்து கோரப்பட்டிருந்தது.

எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இடம்பெறவுள்ளதோடு, நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு தேர்தலை நடத்துவதை ஒத்தி வைக்க வேண்டுமென கோரியும், மக்களின் நடத்தக் கூடாது என்று கோரியும் உயர் நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு எதிர்வரும் 10 ஆம் திகதியன்று உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment