இலங்கை தனது ஜனநாயகம் நல்லிணக்கம் ஆட்சி முறை ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான முக்கிய தருணம் இதுவென இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் விக்டோரியா நுலன்ட் தெரிவித்துள்ளார்
இலங்கைக்கு மீண்டும் திரும்பி வர முடிந்துள்ளமை மிகச்சிறப்பான விடயம். நீங்கள் உங்களின் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் தருணத்தில் நான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளேன். இது உங்கள் வரலாற்றில் மிக முக்கியமான தருணம் என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை.
இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் வளர்ச்சி பாதையில் செலுத்துவதற்கும் அரசாங்கம் சர்வதேச அமைப்புகள் கடன் வழங்குநர்களுடன் இணைந்து செயற்படுகின்ற அதேவேளை இலங்கை தனது ஜனநாயகம் நல்லிணக்கம் ஆட்சி முறை ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான முக்கிய தருணமாகவும் இது காணப்படுகின்றது.
No comments:
Post a Comment