இலங்கை பயங்கரவாத தடைச் சட்டத்தை சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப சீர்திருத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் விக்டோரியா நுலன்ட் தெரிவித்துள்ளார்
செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை பயங்கரவாத தடைச் சட்டத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும், அதன் மூலம் அது சர்வதேச தராதரங்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
இன்று எங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கும், இந்த குழப்பமான தருணத்தில் இலங்கைகக்கான அமெரிக்காவின் உதவி குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கும் குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை விரைவில் முடிப்பதற்கான எங்களின் ஆதரவு குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
மேலும் அமெரிக்கா 13 மில்லியன் டொலர்களை இலங்கையின் 850 அரச பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களுக்கு மதிய உணவை வழங்குவதற்காக வழங்குகின்றது என்பதையும் நான் இன்று அறிவிக்கின்றேன்.
No comments:
Post a Comment