குறைக்கப்படவுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 5, 2023

குறைக்கப்படவுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கையை 5,100 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய எல்லை நிர்ணய குழு தெரிவித்துள்ளது.

தற்போது உள்ளாட்சி நிறுவனங்களில் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 8,000 க்கும் அதிகமாக காணப்படுகின்றது.

மாவட்ட மட்டத்தில் பெறப்பட்ட முன்மொழிவுகள், பல்வேறு தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் தனது சொந்தக் குழுவின் முன்மொழிவுகளை பரிசீலனை செய்து மாவட்ட மட்டத்தில் எல்லை நிர்ணயப் பணிகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கும் என தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்குச் சென்று தமது அறிக்கைக்கான இறுதிப் பிரேரணையைப் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொலன்னறுவை, கண்டி, நுவரெலியா உள்ளிட்ட 12 மாவட்டங்களின் முன்மொழிவுகள் எதிர்வரும் காலங்களில் பெற்றுக் கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

மார்ச் மாத இறுதிக்குள் இது தொடர்பான தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment