உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
பான் கீ மூன், அவரது பாரியார் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று திங்கட்கிழமை (6) அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்தக் குழுவினர் சிங்கப்பூரில் இருந்து UL-309 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பான் கீ மூன் உள்ளிட்ட குழுவினரை வரவேற்றனர்.
இவரது விஜயத்தின்போது நிலையான அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளதாக ஜனாதிபதி ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நாளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.
தென் கொரியாவின் குளோபல் கிரீன் க்ரோத் இன்ஸ்டிட்யூட்டின் தலைவராக உள்ள பான் கீ மூன், அந்த அமைப்பின் சார்பிலும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளார்.
இலங்கையில் அமைக்கப்படவுள்ள காலநிலை மாற்ற பல்கலைக்கழகம் தொடர்பாகவும் அவரது இலங்கை விஜயத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளது.
No comments:
Post a Comment