துருக்கி பூகம்பத்தை சரியாகக் கணித்த டச்சு ஆராய்ச்சியாளர் ! - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 7, 2023

துருக்கி பூகம்பத்தை சரியாகக் கணித்த டச்சு ஆராய்ச்சியாளர் !

துருக்கியில் 7.5 ரிச்டருக்கும் அதிகமான நில நடுக்கம் ஏற்படக்கூடும் என்று டச்சு ஆராய்ச்சியாளர் பிராங்க் ஹூகர்பீட்ஸ் கணித்து கடந்த பெப்ரவரி 03ஆம் திகதி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். 

அவரது கணிப்பை அடுத்து மூன்று நாட்களுக்குப் பிறகு, திங்களன்று (05) அதிகாலை இடம்பெற்ற நில நடுக்கம் துருக்கியிலும் சிரியாவிலும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ளது.

பிராங்க் ஹூகர்பீட்ஸ் சோலார் சிஸ்டம் ஜியோமெட்ரி சர்வேயில் (SSGEOS) பணி புரிகிறார். 

SSGEOS என்பது நில அதிர்வு செயல்பாடு தொடர்பாக வடிவவியலைக் கண்காணிக்க உதவும் ஒரு ஆராய்ச்சி நிறுவனமாகும்.

துருக்கி, ஜோர்டான், சிரியா மற்றும் லெபனான் ஆகிய பகுதிகளில் 7.5 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் ஏற்படும் என்று ஹூகர்பீட்ஸின் கணிப்பு உண்மையாகியதில் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

No comments:

Post a Comment