(எம்.ஆர்.எம்.வசீம்)
பாராளுமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானிப்பதற்காக பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் விசேட கலந்துரையாடல் ஒன்று 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற உள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் மாலை 2 மணிக்கு கூடவுள்ள இந்த கூட்டத்தில், கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் பாராளுன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட இருக்கும் நிகழ்வு தொடர்பாக கலந்துரையாட இருப்பதாக தெரியவருகிறது.
No comments:
Post a Comment