லெபனான் தனது நாணயத்தை 90 வீதம் அளவு மதிப்பிழப்புச் செய்து நேற்று (01) தொடக்கம் டொலர் ஒன்றுக்கு நிகரான பௌண்ட்ஸின் பெறுமதி 15,000 என நிர்ணயித்துள்ளது.
இதன் மூலம் லெபனான் பௌண்ட்ஸின் பெறுமதி அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாற்றம் இன்றி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னர் டொலர் ஒன்றுக்கு நிகராக 1,507 பௌண்ட்ஸ் இருந்ததே தற்போது 15,000 பௌண்ட்ஸ்களாக மாற்றப்பட்டுள்ளது என அந்நாட்டு மத்திய வங்கி ஆளுநர் ரியாத் சலாமி தெரிவித்துள்ளார்.
எனினும் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் லெபனானில் கறுப்புச் சந்தையில் டொலர் ஒன்றுக்கு நிகரான பௌண்ட்ஸின் பெறுமதி சுமார் 57,000 ஆக இருக்கும் நிலையில் இந்த மாற்றம் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment