கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் 60 வது பிறந்த தினத்தையொட்டி இன்று (02) வியாழக்கிழமை புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை நிர்வாக சபையின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு வழங்குவதற்காக இந்த இரத்ததான நிகழ்வு இடம் பெற்றது.
ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை நிர்வாக சபை தலைவர் எம்.ஐ.எம். அஸ்மின் ரியாஸ் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில் பாலர் பாடசாலையின் நிர்வாகிகள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர் மற்றும் அதன் தாதியர்கள் ஊழியர்களும் கலந்து கொண்டதுடன் இதன்போது ஆண்கள் பெண்கள் என பலரும் இரத்ததானம் செய்தனர்.
No comments:
Post a Comment