நாட்டிலிருந்து 2022ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளவர்கள் மூலம் 3,789 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு கிடைத்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேவேளை 2021ஆம் ஆண்டு இவ்வாறு நாட்டிலிருந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளவர்கள் மூலம் 5,491 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள மத்திய வங்கியின் அதிகாரிகள், 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அந்த வருமானம் 2022ஆம் ஆண்டு 31.0 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும், எவ்வாறெனினும் கடந்த வருடத்தின் நடுப்பகுதியில் அதனை இயல்பு நிலைக்கு கொண்டுவர முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment