சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை சொற்பமே - பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 31, 2023

சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை சொற்பமே - பந்துல குணவர்தன

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தின் வருடாந்த செலவுகளுடன் ஒப்பிடும்போது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை சொற்பமாகும். சம்பிரதாயபூர்வமான இந்த செலவினை தவிர்க்குமாறு எவராலும் கூற முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் வருடாந்த செலவீனங்களுடன் ஒப்பிடுகையில் வருடத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் கொண்டாடப்படும் சுதந்திர தினத்திற்காக செலவிடப்படும் தொகை சொற்பமாகும். எனவே அரசாங்கத்தினால் சுதந்திர தினத்தை கொண்டாடாமல் இருக்க முடியாது.

எந்தவொரு நாடும் தமது தேசிய தினத்தை கொண்டாடுவது சம்பிரதாயமாகும். குறித்த தினத்தில் இலங்கை தொடர்பில் ஏனைய நாடுகளிலும் பேச்சப்படும்.

கடந்த வாரம் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அதன் குடியரசு தின நிகழ்வை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தமை விசேட அம்சமாகும்.

எனவே இந்த சம்பிரதாயபூர்வ செலவினை ஏற்க வேண்டாம் என்று எவராலும் கூற முடியாது.

இம்முறை இலங்கை சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எனவே செலவுகளைக் காரணமாகக் காண்பித்து இதனை தவிர்க்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment