அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் : பதில் இல்லையேல் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 31, 2023

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் : பதில் இல்லையேல் போராட்டம்

சமீபத்தைய வரி அதிகரிப்புகள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாய்ப்பளிக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்றைய தினம் (31) ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்து கடிதமொன்று அனுப்பப்படவுள்ளதாக தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய வரி முறையை நீக்கி விட்டு நியாயமான முறையொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எண்ணியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு வார காலத்திற்குள் நியாயமான பதில் கிடைக்காவிட்டால் போராட்டங்களை அதிகரிக்க எண்ணியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களிற்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ள சில தரப்பினரின் நன்மைக்காக புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஜனாதிபதி தலையிட்டு நியாயமான வரிகளை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment