ஜனாதிபதி எச்சந்தர்ப்பத்திலும் ஆலோசனை வழங்கவில்லை - பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 31, 2023

ஜனாதிபதி எச்சந்தர்ப்பத்திலும் ஆலோசனை வழங்கவில்லை - பந்துல குணவர்தன

(எம்.மனோசித்ரா)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எந்த வகையிலும் மத்திய அரசின் செயற்பாடுகளில் தாக்கம் செலுத்தப் போவதில்லை. அவ்வாறிருக்கையில் தேர்தலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆலோசனை வழங்கியிருக்க வாய்ப்பில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ஜனாதிபதி ஊடகப்பிரிவிற்கு ஆலோசனை வழங்கவில்லை. அதற்கான சாட்சிகள் இருந்தால் ஆதரத்துடன் நிரூபிக்க முடியும்.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரது கட்சிக்கும், அரசாங்கத்திலுள்ள ஏனைய தரப்பினருக்கும் தேர்தலுக்கு தயாராகுமாறே ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றார். அதற்கமைய நாம் வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கின்றோம். வேட்பாளர்களை தெளிவூட்டுவதற்கான செயற்திட்டங்களையும் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

இந்த தேர்தல் எந்த வகையிலும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புபடவில்லை. எனவே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நியமனங்களை வழங்கல் அல்லது நீக்குதல் தொடர்பான தேர்தலாக அமையப் போவதுமில்லை என்றார்.

No comments:

Post a Comment