தேங்காயின் விலை குறைவடையும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 31, 2023

தேங்காயின் விலை குறைவடையும்

சந்தையில் தேங்காயின் விலை வெகுவாக அதிகரித்துள்ள போதும், எதிர்வரும் மார்ச் மாதம் முதல் தேங்காயின் விலை குறைவடையுமென தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சந்தையில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 130 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அந்நிறுவனம், தென்னை சம்பந்தப்பட்ட உற்பத்திகளின் விலை அதிகரிப்பும் தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியுமே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதத்தில் அதிகரித்த தேங்காய் அறுவடையை எதிர்பார்த்துள்ளதாகவும் மார்ச் மாதத்தில் 600 மில்லியன் தேங்காய்கள் கிடைக்குமென்றும் அவர் தெரிவித்தார்.

இந்த அறுவடை கிடைக்குமாயின் தேங்காயின் விலை குறைவடையும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments:

Post a Comment