உலக பொருளாதார வளர்ச்சி கணிப்பை உயர்த்தியது சர்வதேச நாணய நிதியம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 31, 2023

உலக பொருளாதார வளர்ச்சி கணிப்பை உயர்த்தியது சர்வதேச நாணய நிதியம்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்பாராத மீட்சி மற்றும் கொவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு சீன பொருளாதாரம் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் 2023ஆம் ஆண்டின் உலக பொருளாதார வளர்ச்சி கணிப்பை சர்வதேச நாணய நிதியம் சற்று அதிகரித்துள்ளது.

உலகப் பொருளாதார வளர்ச்சி 2022 இல் 3.4 வீதத்தில் இருந்து 2023 இல் தொடர்ந்தும் 2.9 வீதமாக வீழ்ச்சி கண்டபோதும் அது ஒக்டோபரில் எதிர்வுகூறப்பட்ட 2.7 வீதத்தை விடவும் முன்னேற்றம் கண்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் கூறியது. உலகப் பொருளாதார மந்தநிலை குறித்தும் அது முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தது.

2024 ஆம் ஆண்டுக்காக உலக பொருளாதார வளர்ச்சி 3.1 வீதமாக சற்று அதிகரித்தபோதும், உலகெங்கும் உள்ள மத்திய வங்கிகளால் வட்டி வீதம் உயர்த்தப்படுவது கேள்வியை மெதுவடையச் செய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மந்தநிலை அச்சுறுத்தல் குறைந்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய வங்கிகள் முன்னேற்றம் கண்டபோதும், உக்ரைனியப் போர் மேலும் தீவிரம் அடைந்து, கொவிட் தொற்றுக்கு எதிரான சீனாவின் போராட்டம் தொடரும் நிலையில் விலைவாசி மற்றும் புதிய இடையூறுகளை கட்டுப்படுத்துவதில் மேலும் நடவடிக்கை தேவை என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் பீர் ஒலிவியர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment