நிலுவைப் பணம் 2.4 பில்லியன் ரூபா வழங்கப்பட்டது : கல்வி அமைச்சு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 31, 2023

நிலுவைப் பணம் 2.4 பில்லியன் ரூபா வழங்கப்பட்டது : கல்வி அமைச்சு

பாடசாலை போஷாக்குத் திட்டத்தின் கீழ் உணவு விநியோகஸ்தர்களுக்கான அனைத்து நிலுவைப் பணத்தையும் வழங்கி, நிறைவு செய்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலை போஷாக்கு உணவுத் திட்டத்தின் கீழ், 2022 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுடன் சம்பந்தப்பட்ட மாகாண மட்டத்திலான உணவு விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய முழுமையான நிலுவைப்பணமாக 2.4 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. 

மேல் மாகாணத்திற்காக ரூபா 39,94,18,020.00 மத்திய மாகாணத்திற்காக ரூபா 26,99,00,000.00, கிழக்கு மாகாணத்திற்காக ரூபா 35,00,00,000.00, வட மத்திய மாகாணத்துக்காக ரூபா 25,60,00,000.00, வடமேல் மாகாணத்துக்காக ரூபா 22,10,00,000.00, வட மாகாணத்துக்காக ரூபா 16,40,50,718.00, சப்ரகமுவ மாகாணத்துக்காக ரூபா 18,29,93,773.00, தென் மாகாணத்துக்காக ரூபா 33,53,56,317.00, ஊவா மாகாணத்துக்காக ரூபா 22,54,70,000.00 என்ற ரீதியில் நிலுவைப் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மாகாணங்களுக்குமான நிதி ஜனவரி 31 ஆம் திகதி உரிய மாகாண வைப்புக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது. 

உணவு விநியோகஸ்தர்களுக்கு வலய கல்வி அலுவலகங்கள் மூலம் இக்கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment