முச்சக்கர வண்டி பஸ்ஸுடன் விபத்து : 7 வயது மகள் பலி : வைத்தியசாலையில் தாய் உள்ளிட்ட மூவர் - News View

About Us

Add+Banner

Wednesday, December 28, 2022

demo-image

முச்சக்கர வண்டி பஸ்ஸுடன் விபத்து : 7 வயது மகள் பலி : வைத்தியசாலையில் தாய் உள்ளிட்ட மூவர்

Accident-7%20Year%20Old%20Died
பதுளை, கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பிட்டிய வீதியில் முச்சக்கர வண்டியொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் ஏழு வயது சிறுமி பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் தாய் உள்ளிட்ட மூன்று பேர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கஹட்டரூப்பவில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன் அம்பிட்டிய பகுதியிலிருந்து முத்துமால பகுதிக்கு சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றும் அம்பிட்டிய சந்தியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் குறித்த முச்சக்கர வண்டியை செலுத்திய பெண் சாரதி உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போதே ஏழு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் பலியாகியுள்ள சிறுமியின் தாயாரே முச்சக்கர வண்டியின் சாரதியாக செயற்பட்டுள்ளார்.

சிறுமியின் தாய் உட்பட மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மரணித்த சிறுமி முத்துமால கொவிபொல கெந்தகொல்ல பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

பேருந்தின் சாரதி கஹட்டரூப்ப பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹட்டரூப்ப பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(லுணுகல நிருபர் - நடராஜா மலர்வேந்தன்)

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *