(எம்.வை.எம்.சியாம்)
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் கட்டிட நிர்மாணத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதால் பல முக்கிய கட்டுமான நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.
மேலும் இந்த நிலை தொடருமானால் எதிர்காலத்தில் பலர் வேலை இழக்க நேரிடும் என்று பொறியாளர்கள் எச்சரித்துள்ளனர்
மூலப் பொருட்களின் பாரிய விலையேற்றத்தாலும் குறித்த நிறுவனங்களின் இயந்திரங்கள் பழுதடைந்து வருவதாலும் இந்நிலை உருவாக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் காலங்களில் இந்நிலை மேலும் மோசமாகும் பட்சத்தில் பலர் வேலை இழக்க நேரிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment