ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 6, 2022

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC), இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குஆதரவு - 20 நாடுகள் (YES)
எதிராக - 07 நாடுகள் (NO)
வாக்களிப்பு தவிர்ப்பு - 20 நாடுகள் (ABST)

ஐ.நா. மனித உரிமைகள் தொடர்பான 51ஆவது அமர்வில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான A/HRC/51/L.1 Rev.1 எனும் தீர்மானமே இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பின்வரும் நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணையை எதிர்த்து, இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன.
சீனா
பாகிஸ்தான்
கியூபா
பொலிவியா
உஸ்பெகிஸ்தான்
வெனிசூலா
செச்சினியா

No comments:

Post a Comment