(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)
பல்கலைக்கழகத்தில் உள்ள தங்களது பிள்ளைகளை கூட்டங்களுக்கும், போராட்டங்களுக்கும் பலவந்தமாக அழைத்துச் செல்வதாக மாணவர்களின் பெற்றோர்கள் முறைப்பாடளித்துள்ளனர். பகிடிவதையால் மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு விரைவான தீர்வு காணுமாறு உயர் கல்வி அமைச்சரிடம் வலியுறுத்துவதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார சபையில் தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் இன்று (05) புதன்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, குருநாகல் மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்கு சென்றுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் பலர் தனதுக்கு தொலைபேசியில் அழைத்து கண்ணீர் வடிக்கிறார்கள்.
கூட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் தங்களது பிள்ளைகளை பலவந்தமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என பெற்றோர்கள் தன்னிடம் முறைப்பாடளித்துள்ளார்கள்.
பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் பகடிவதைகளால் தங்களது பிள்ளைகள் பெரும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் பெற்றோர்கள் கூறுகிறார்கள்.
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றொரு மாணவரும் காணாமல் போயுள்ளதாகவும் பல்கலைக்க மாணவர்கள் பெரும் மன அழுத்தத்துக்கு .உள்ளாகியுள்ளார்கள்.
பகிடிவதை காரணமாக மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல்கலைகழக கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைக்கு விரைவான தீர்வு காண உயர் கல்வி அமைச்சரும், உயர் கல்வி இராஜாங்க அமைச்சரும் உரிய அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment