தேங்காய்களின் விலைகள் தற்போது 1.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற தேங்காய் ஏல விற்பனையின் போது ஆயிரம் தேங்காய்களின் விலை 58,516.87 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை தெங்கு அபிவிருத்தி சபையினால் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில் கிடைத்த அதிக விலை 68,000 ரூபாவாகும்.
ஏற்கனவே அதற்கு முந்திய வாரத்தில் 1,000 தேங்காய்களுக்கு 63,700 ரூபாவே ஏலத்தில் கிடைத்துள்ளன.
இந்நிலையில் இந்த ஏலத்தின் போது 10 இலட்சத்து 18 ஆயிரத்து 186 தேங்காய்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.
அதில், 7 இலட்சத்து 6 ஆயிரத்து 9 தேங்காய்கள் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் தேங்காய் அடிப்படையிலான பொருட்களின் ஏற்றுமதி 7 சதவீதத்தால் அதிகரித்து அதன் வருமானம் 573 மில்லியன்களாக உயர்ந்துள்ளமை தெரிந்ததே.
No comments:
Post a Comment