எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தடையின்றி மின்சாரம் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 2, 2022

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தடையின்றி மின்சாரம்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்சாரத்தை தடையின்றி வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பழுதடைந்த இரண்டு மின் உற்பத்தி அலகுகளும் அடுத்த இரண்டு வாரங்களில் மீண்டும் தேசிய மின்னோட்டத்துடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஒக்டோபர் இறுதிக்குள் நிலக்கரி கையிருப்பு தீர்ந்து விட்டதால் மின் வெட்டை நீடிக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் நிலக்கரி கொள்முதல் சாத்தியம் காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது தினசரி இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைப்படுவதோடு, அனல் மின் நிலையத்தில் உள்ள 3 வது அலகு திங்கட்கிழமைக்குள் மீண்டும் தேசிய மின் தொகுப்புடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நுரைச்சோலை லக் விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி திருத்தப்பட்டு, மீண்டும் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டாலும் மின் துண்டிப்பு நேரம் குறைக்கப்படாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களிலும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க கூறியுள்ளார்.

இதனிடையே, எரிபொருட்களின் தரம் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் முன்னெடுக்கப்படும் பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் ஜனக்க ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment