மலையகத்தில் அடைமழை ! வான் கதவுகள் திறப்பு ! மக்களே அவதானம் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 2, 2022

மலையகத்தில் அடைமழை ! வான் கதவுகள் திறப்பு ! மக்களே அவதானம்

(க.கிஷாந்தன்)

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. 

இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு ஒரு வான் கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர் மட்டம் அதிகரித்ததால் இன்று (03.10.2022) அதிகாலை மேலும் ஒரு வான் கதவு திறக்கப்பட்டது.

இதனால் சென்கிளயார் நீர் வீழ்ச்சியின் நீர் மட்டமும் அதிகரித்து ரம்மியமாக காட்சியளிக்கின்றது.

அத்துடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த மழை காரணமாக லக்ஷபான நீர்த் தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், விமலசுரேந்திர நீர்த் தேக்கத்தின் அணைக்கட்டிற்கு மேலாக நீர் வெளியாகுகின்றன.

அத்தோடு, பெய்து வரும் மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment