சாய்ந்தமருது கடலில் மிதந்த சடலத்தை மீட்ட கடற்படை - News View

About Us

About Us

Breaking

Sunday, October 2, 2022

சாய்ந்தமருது கடலில் மிதந்த சடலத்தை மீட்ட கடற்படை

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது கடலில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கல்முனை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது கடலில் சடலமொன்று மிதப்பதாக சாய்ந்தமருது பொலிஸாருக்கு மீனவர்களினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் கல்முனை கடற்படையின் உதவியுடன் குறித்த பெண்ணின் சடலம் இன்று திங்கட்கிழமை (03) காலை மீட்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மீனவர்கள் மீன் பிடி நடவடிக்கைக்காக கடற்கரை பகுதிக்கு சென்ற நிலையிலேயே பெண் ஒருவரின் சடலம் கடலில் மிதப்பதை அவதானித்தனர்.

மீனவர்கள் சாய்ந்தமருது பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து  சாய்ந்தமருது பொலிஸார் கல்முனை கடற்படையின் உதவியை நாடியிருந்தனர். 

இதனடிப்படையில் கடலில் மிதந்த 55 - 60 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை மீட்டு கல்முனை கடற்படை முனைக்கு கொண்டுசெல்லப்பட்டதையடுத்து சடலம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment